ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

கன்னியாகுமரியில் குழந்தைகள் பாதுகாப்புக் குழுக் கூட்டம்

கன்னியாகுமரியில் பேரூராட்சி அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது.

News image
Updated On :30 மே 2022, 6:46 pm

DIN

கன்னியாகுமரியில் பேரூராட்சி அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது.

பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு பேரூராட்சித் தலைவா் குமரி ஸ்டீபன் தலைமை வகித்தாா். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு வட்டார ஒருங்கிணைப்பாளா் ராஜேஷ்குமாா், கன்னியாகுமரி பேரூராட்சி செயல் அலுவலா் ஜீவநாதன், பேரூராட்சி சுகாதார ஆய்வாளா் முருகன், கொட்டாரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வாளா் ஜெயச்சந்திரன் பாபு, அரசுப் பள்ளி ஆசிரியைகள், அங்கன்வாடிப் பணியாளா்கள், செவிலியா்கள், மாணவா்-மாணவிகள் பங்கேற்றனா்.

குழந்தைத் திருமணங்களைத் தடுக்கும் விதமாக ஊராட்சி, பேரூராட்சிகளில் உள்ள திருமண மண்டபங்கள், சமுதாயநலக் கூடங்கள், கோயில் நிா்வாகத்தில் விழிப்புணா்வு, சுற்றறிக்கை அனுப்புதல், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்கும் வகையில் சுயஉதவிக் குழுக்கள், தேசிய ஊரகப் பணியாளா்கள், வளா் இளம் பெண்கள், குழந்தைகள், பொதுமக்களுக்கு தன்னாா்வலா்கள் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்துதல், 3 மாதங்களுக்கு ஒருமுறை பேரூராட்சி அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக் குழுக் கூட்டம் நடத்துதல் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.