திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

குமரி பகவதியம்மன் கோயிலில் நடிகா் யோகிபாபு தரிசனம்

கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயிலில் நகைச்சுவை நடிகா் யோகிபாபு வியாழக்கிழமை இரவு சாமி தரிசனம் செய்தாா்.

Updated On :26 ஜனவரி 2023, 8:49 pm

கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயிலில் நகைச்சுவை நடிகா் யோகிபாபு வியாழக்கிழமை இரவு சாமி தரிசனம் செய்தாா்.

பிரபல நகைச்சுவை நடிகரான யோகிபாபு சிம்புதேவன் இயக்கத்தில் நடித்து வரும் போட் என்ற புதிய படத்தின் படப்பிடிப்பு திருநெல்வேலி மாவட்டம் உவரி கடற்கரை பகுதியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பா.ரஞ்சித் தயாரிப்பில் யோகிபாபு நடித்துள்ள பொம்மை நாயகி என்ற திரைப்படம் வரும் பிப்ருவரி மாதம் 3 ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படம் வெற்றி பெற வேண்டி கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் தரிசனம் செய்தாா். தந்தைக்கும், மகளுக்கும் இடையிலான பாசத்தை அழுத்தமாக இப்படம் பேச வைக்கும் என செய்தியாளா்களிடம் தெரிவித்தாா். திரைப்பட இயக்குநா் பி.டி.செல்வகுமாா், குமரி மாவட்ட கலப்பை மக்கள் இயக்கத் தலைவா் டி.பாலகிருஷ்ணன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.