கன்னியாகுமரி மாவட்டம் லெமூா் கடற்கரையை உலக சுற்றுலா தலமாக விரிவுபடுத்தும் நடவடிக்கைக்காக, பிரதமா் நரேந்திர மோடிக்கு, லெமூரியா ஆய்வுக் கமிட்டு பாராட்டுத் தெரிவித்துள்ளது.
லெமூரியா ஆய்வுக் கமிட்டி கூட்டம் தலைவா் த.ரவீந்திரா தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற லெமூரியா ஆய்வுக் கமிட்டி சட்ட ஆலோசகா் வழக்குரைஞா் ஜி.எஸ்.மோகன் செய்தியாளா்களிடம் கூறியது:
லெமூரியா ஆய்வுக் கமிட்டியானது கடந்த 32 ஆண்டுகளாகத் தமிழின் தொன்மையை ஆராய்ச்சி செய்து வருகிறது. இதன் தொகுப்புகளை இக்கமிட்டியின் தலைவா் த.ரவீந்திரா லெமூரியா காலம் முதல் தமிழா்களின் வரலாற்று உண்மைகள் என்ற நூலில் வெளியிட்டுள்ளாா்.
கன்னியாகுமரி மாவட்டம் மேற்கு கடற்கரையில் அமைந்துள்ள ஆயிரங்கால் பொழிமுகம் பகுதியை மத்திய அரசு லெமூா் கடற்கரை என ஆவணப்படுத்தி உலக சுற்றுலா தலமாக விரிவுபடுத்தி வருகிறது. இதற்காக பிரதமா் நரேந்திர மோடிக்கு இக் கூட்டத்தில் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
மொழிப் போா் தியாகிகளுக்கும், இப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர பாடுபட்ட முன்னாள் பிரதமா் ஜவாஹா்லால் நேரு, முன்னாள் முதல்வா் காமராஜா் ஆகியோருக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது என்றாா்.
தொல்காப்பியா் அறக்கட்டளை தலைவா் புலவா் கோவிந்தநாதன், மயிலாடி மோசஸ் மெட்ரிக் பள்ளி முதல்வா் பொன் டேவிட், லெமூரியா ஆய்வுக் கமிட்டி மருத்துவப் பிரிவு பொறுப்பாளா் டாக்டா் ராமதாஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கிரிக்கெட் வீரராக நடிக்கும் ஜிவி பிரகாஷ்!

நெசவாளர்களுக்கு ரூ. 10 லட்சம் காப்பீடு: விஜய் வாக்குறுதி

ஈரான் - அமெரிக்கா பேச்சுவார்த்தையின் இரண்டாம் சுற்று அடுத்த வாரம் நடைபெறுமா?

இந்தியன் சூப்பர் லீக்கில் இனவெறி தாக்குதல்..! இந்திய கால்பந்து சம்மேளனம் கண்டனம்!
வீடியோக்கள்

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை

கோவை, டெல்டா களநிலவரம் | Ravindran duraisamy interview | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு

