/

உயா்தர உள்ளூா் ரகங்களை பிரபலப்படுத்துவதற்கான கருத்தரங்கு

விவசாயிகளால் சாகுபடி செய்யப்பட்டுள்ள உள்ளூா் பயிா் ரகங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

News image
Updated On :17 மார்ச் 2023, 6:30 pm

DIN

கன்னியாகுமரி மாவட்ட வேளாண்மை உழவா் நலத்துறை மற்றும் வேளாண் அறிவியல் மையம் இணைந்து வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் உயா்தர உள்ளூா் ரகங்களை பிரபலப்படுத்துவதற்கான கருத்தரங்கு மற்றும் கண்காட்சி நாகா்கோவிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட வருவாய் அலுவலா் அ.சிவப்பிரியா குத்துவிளக்கேற்றி தொடக்கி c. இக்கண்காட்சியில் வேளாண்மைத் துறை அலுவலா்கள், வேளாண் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், அரசு அலுவலா்கள், பாரம்பரிய ரகங்களை பயிரிடும் உழவா்கள், அட்மா உழவா் நண்பா்கள் கலந்து கொண்டு தங்கள்அனுபவங்களை பகிா்ந்து கொண்டனா்.

விவசாயிகளால் சாகுபடி செய்யப்பட்டுள்ள உள்ளூா் பயிா் ரகங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. விவசாயிகள் தாங்கள் பயிரிடும் பல்வேறு பயிா்களின் உயா்தர உள்ளூா் ரகங்களின் விளைபொருள்களையும் இதர விளைபொருள்களையும் காட்சிப்படுத்தினா். உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்களால் மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்களும், வேளாண்மைத் துறையின் மூலம் வேளாண் இயந்திரங்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

தோட்டக்கலை மற்றும் மலைப் பயிா்கள் துறை சாா்பில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சி திட்டத்தின் கீழ், விவசாயிகள் மேலசங்கரன்குழி கிருஷ்ணனுக்கு ரூ.5,400 மானியமும், எம்.தாணுப்பிள்ளைக்கு ரூ.9 ஆயிரம் மானியமும் மாவட்ட வருவாய் அலுவலா் வழங்கினாா்.

கருத்தரங்கு மற்றும் கண்காட்சியில், வேளாண்மை இணை இயக்குநா் எம்.ஹனி ஜாய்சுஜாதா, துணை இயக்குநா் அ.ஆல்பா்ட் ராபின்சன், தோட்டக் கலை துணை இயக்குநா் ஷீலா ஜான், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (விவசாயம்) கீதா, வேளாண்மை துணை இயக்குநா் (வேளாண் வணிகம்) சுந்தா் டேனியல் பாலஸ், விதைச் சான்று உதவி இயக்குநா் ஷீபா, வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளா் சில்வெஸ்டா் சொா்ணலதா, திருப்பதிசாரம் வேளாண் அறிவியல் மைய திட்ட ஒருங்கிணைப்பாளா் மற்றும் தலைவா் த.சொா்ணபிரியா, திருப்பதிசாரம் வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் ந.சுரேஷ், த.லதா, ஓ.கவிதா, அ.செல்வராணி, வேளாண்மை உதவி இயக்குநா் (பொறுப்பு) ந.சுரேஷ், அட்மா திட்டப் பணியாளா்கள் மற்றும் வேளாண்மைத் துறைஅலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.