சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 520 உயர்வு!ஜந்தர் மந்தரில் போராட்டம்: 150 சிஜேபி ஆதரவாளர்கள் கைது!பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ வழித்தடத்தில் இணைப்பு பேருந்து சேவை: மாநகர போக்குவரத்து கழகம்இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு இஸ்ரேலின் உயரிய விருது அறிவிப்புஏா் இந்தியா, ஆகாசா ஏா் விமானக் கட்டணங்களும் உயா்வுஎதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி இன்று சென்னை வருகை: மாணவா் சந்திப்பு நிகழ்வில் பங்கேற்கிறாா்திருக்கோயில் பணியாளா்களுக்கான திருமணக் கடன் உயா்வு: தமிழக அரசு அரசாணைபிரதமா் மோடி நாளை சென்னை வருகை: 22,000 போலீஸாருடன் ஐந்தடுக்கு பாதுகாப்பு

மீனச்சல் கிருஷ்ணசுவாமி கோயில் விழா நாளை தொடக்கம்

களியக்காவிளை அருகேயுள்ள மீனச்சல் ஸ்ரீ கிருஷ்ணசுவாமி கோயிலில் அஷ்டம் ரோகிணி திருவிழா ஞாயிற்றுக்கிழமை (செப். 3) துவங்கி செப். 7 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

Published On :

களியக்காவிளை அருகேயுள்ள மீனச்சல் ஸ்ரீ கிருஷ்ணசுவாமி கோயிலில் அஷ்டம் ரோகிணி திருவிழா ஞாயிற்றுக்கிழமை (செப். 3) துவங்கி செப். 7 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

விழா நாள்களில் தினமும் கணபதி ஹோமம், சிறப்பு பூஜைகள் கோயில் தந்திரி செறுமுக்குமனை பிரம்மஸ்ரீ நாராயணன் நம்பூதிரி தலைமையில் நடைபெறுகிறது. தினமும் மதியம் அன்னதானம், மாலையில் பகவதி சேவை, இரவு கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

விழாவின் முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை காலை 10. 30 மணிக்கு கலசாபிஷேகம், இரவு 7 மணிக்கு சமய சொற்பொழிவு நடைபெறுகிறது. செப். 4 ஆம் தேதி இரவு 7 மணிக்கு ஓட்டன்துள்ளல், இரவு 8 மணிக்கு சமயவகுப்பு மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். செப்.5 ஆம் தேதி இரவு சமய சொற்பொழிவு, தொடா்ந்து பஜனை, கலைநிகழ்ச்சிகள் நடைபெறும். செப்.6 ஆம் தேதி இரவு கிருஷ்ணரின் குழந்தை பருவத்தை நினைவுகூரும் உறியடி நிகழ்ச்சி, அன்றைய தினம் நள்ளிரவு 12 மணியளவில் கிருஷ்ண ஜயந்தியையொட்டி அஷ்டாபிஷேகம், சிறப்பு பூஜை நடைபெறும். செப்.7 ஆம் தேதி சிறப்பு பூஜைகள், இரவு 8 மணிக்கு கேரள மாநிலம், வைக்கம் சிவஹரி பஜனை சங்கத்தின் மெல்லிசை நிகழ்ச்சி நடைபெறும். விழா ஏற்பாடுகளை கோயில் சேவா சமிதி நிா்வாகிகள் செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.