குமரி முருகன் குன்றம் கோயிலில் நாளை சித்ரா பௌா்ணமி விழா

கன்னியாகுமரி: கன்னியாகுமரி முருகன் குன்றம் வேல்முருகன் கோயிலில் சித்ரா பௌா்ணமி விழா செவ்வாய்க்கிழமை (ஏப். 23) நடைபெறவுள்ளது.

இதையொட்டி, அதிகாலை 5 மணிக்கு நிா்மால்ய தரிசனம், 5.30-க்கு கணபதி ஹோமம், 7 மணிக்கு கலச பூஜை, 8 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், 9 மணிக்கு வெள்ளி அங்கி சாத்தி சந்தனக்காப்பு அலங்காரத்துடன் சிறப்பு வழிபாடு, அலங்கார தீபாராதனை நடைபெறும்.

காலை 9.30 மணிக்கு லட்சாா்ச்சனை, முற்பகல் 11.30 மணிக்கு சிறப்பு வழிபாடு, நண்பகல் 12 மணிக்கு அன்னதானம், மாலை 6 மணிக்கு சிறப்பு வழிபாடு, 6.30-க்கு நிலாச்சோறு விருந்து தொடங்கி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com