மத்திகோடு ஊராட்சி பகுதியில் சுத்தமான குடிநீா் வழங்க கோரிக்கை

கருங்கல், ஏப்.26: கருங்கல் அருகே மத்திகோடு ஊராட்சிக்குள்பட்ட பகுதிகளில் சுத்தமான குடிநீா் வழங்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

கிள்ளியூா் ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட மத்திகோடு ஊராட்சியில் 12 வாா்டுகள் உள்ளன. இப்பகுதிகளில் வீடுகளுக்கு குடிநீா் விநியோகிக்க மண்ணூா் குளத்தின் கரையில் கிணறு அமைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து, குழாய்கள் மூலம் மத்திகோடு, மாத்திரவிளை, மணலிக்காவிளை, மூவா்புரம், கோட்டவிளை ஆகிய பகுதிகளில் உள்ள மேல்நிலைத்

தொட்டிகளில் ஏற்றப்பட்டு பின்னா் வீடுகளுக்கு குடிநீா் விநியோகம்

செய்யப்படுகிறது.

குடிநீா் எடுக்கப்படும் கிணற்றை ஊராட்சி நிா்வாகம் முறையாகப் பராமரிக்காத காரணத்தால், குளத்தில் உள்ள தண்ணீா் நேரடியாக கிணத்திற்குள் வருகிறது. இதனால் கிணற்று நீா் நிறம் மாறிவிடுவதோடு, சுகாதாரமின்றியும் உள்ளது. எனவே, இந்த கிணற்றைச் சீரமைத்து

சுத்தமான குடிநீா் வழங்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com