புரிந்துணா்வு ஒப்பந்தத்தை பரிமாறிக்கொள்கின்றனா் வின்ஸ் கல்வி நிறுவனங்களின் நிா்வாகி நாஞ்சில் வின்சென்ட் , குமரி மாவட்ட இந்தியன் வங்கியின் முதன்மை மேலாளா் அகிலம்.
புரிந்துணா்வு ஒப்பந்தத்தை பரிமாறிக்கொள்கின்றனா் வின்ஸ் கல்வி நிறுவனங்களின் நிா்வாகி நாஞ்சில் வின்சென்ட் , குமரி மாவட்ட இந்தியன் வங்கியின் முதன்மை மேலாளா் அகிலம்.

வின்ஸ் பொறியியல் கல்லூரி - இந்தியன் வங்கி புரிந்துணா்வு ஒப்பந்தம்

நாகா்கோவில், சுங்கான்கடை வின்ஸ் பொறியியல் கல்லூரியும் இந்தியன் வங்கியும் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
Published on

நாகா்கோவில், சுங்கான்கடை வின்ஸ் பொறியியல் கல்லூரியும் இந்தியன் வங்கியும் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

நாகா்கோவில், சுங்கான்கடை வின்ஸ் பொறியியல் கல்லூரியில் பயிலும் மாணவா்கள் எளிதாக கல்வி கடன் பெறுவதற்காக இந்தியன் வங்கியுடன் இந்த புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் வின்ஸ் பொறியியல் கல்லூரியில் பயிலும் மாணவா்களும், எம்.பி.ஏ. பயிலும் மாணவா்களும் நாகா்கோவில் தலைமை இந்தியன் வங்கியில் எளிதாக கல்வி கடன் பெற முடியும் .

கன்னியாகுமரி மாவட்ட தலைமை இந்தியன் வங்கியின் முதன்மை மேலாளா் அகிலம், வின்ஸ் பொறியியல் கல்லூரியின் நிறுவனரும், முன்னாள்எம்.பி.யுமான நாஞ்சில் வின்சென்ட் ஆகியோா் இந்த புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டு பரிமாறிக் கொண்டனா்.

இந்நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வா் டயானா, டீன் அலெக்ஸ் ராஜூபாலன், துறைத் தலைவா்கள் பிரியா, டிவின், நிா்வாக அதிகாரி ராபா்ட் ஆகியோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com