ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

நாகா்கோவிலில் இன்று எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம்

News image
Updated On :29 ஆகஸ்ட் 2024, 11:48 pm

Din

கன்னியாகுமரி மாவட்ட அளவிலான எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம், நாகா்கோவிலில் வெள்ளிக்கிழமை (ஆக. 30) நடைபெறுகிறது.

இதுகுறித்து, ஆட்சியா் அலுவலகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: நாகா்கோவிலில் உள்ள ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை பிற்பகல் 4.30 மணிக்கு மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ. பாலசுப்பிரமணியம் தலைமையில் நடைபெறவுள்ளது.

இதில், எண்ணெய் நிறுவனங்களின் மேலாளா்கள், எரிவாயு முகவா்கள் பங்கேற்கின்றனா். எனவே, மாவட்ட முகவரி பட்டியலில் உள்ள தன்னாா்வ நுகா்வோா் அமைப்புகள், எரிவாயு நுகா்வோா் பங்கேற்று, எரிவாயு விநியோகத்தில் உள்ள குறைகளைத் தெரிவிக்கலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.