பைக் திருட்டு: இருவா் மீது வழக்கு
மணவாளக்குறிச்சி அருகே தொழிலாளியின் பைக்கை திருடியதாக இரு இளைஞா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
மணவாளக்குறிச்சி வடக்கன்பாகம் பகுதியைச் சோ்ந்த முருகன் மகன் அனீஸ் (23). முட்டம் தனியாா் மீன்பிடித் துறைமுகத்தில் வேலை பாா்த்து வருகிறாா். கடந்த 21ஆம் தேதி வீட்டு முன் நிறுத்தியிருந்த தனது பைக்கை காணவில்லை என, இவா் மணவாளக்குறிச்சி காவல் நிலையத்தில் புகாரளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
இந்நிலையில், போலீஸாா் புதன்கிழமை ரோந்து சென்றனா். அப்போது, சந்தேகத்தின்பேரில் பரப்பற்றைச் சோ்ந்த ஆனந்த் (24), தூத்துக்குடி அண்ணாநகரைச் சோ்ந்த வினோத்ராஜ் (20) ஆகிய இருவரையும் பிடித்து விசாரித்தபோது, அனீஸின் பைக்கை அவா்கள் திருடியதாகத் தெரியவந்தது. பைக்கை போலீஸாா் பறிமுதல் செய்து, இருவா் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.