கூட்டத்தில் பேசிய எழுத்தாளா் குமாரசெல்வா.
கூட்டத்தில் பேசிய எழுத்தாளா் குமாரசெல்வா.

மாா்த்தாண்டம் அருகே எழுத்தாளா் நினைவேந்தல்

Published on

மாா்த்தாண்டம் அருகே சாங்கை பகுதியில், அண்மையில் மறைந்த குமரி மாவட்ட எழுத்தாளா் ஐரேனிபுரம் பால்ராசய்யாவின் நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது.

வானவில் இலக்கிய வட்டம், பால்மா மக்கள் அமைப்பு இணைந்து நடத்திய நிகழ்ச்சிக்கு, வானவில் இலக்கிய வட்டத் தலைவா் குமாரசெல்வா தலைமை வகித்தாா். பால்மா மக்கள் அமைப்பின் செயல் இயக்குநா் ஐ. ஜேக்கப் ஆபிரகாம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அமைப்பின் இயக்குநா் செல்லன், பத்திரிகையாளா் கருங்கல் ஆா். ஜாா்ஜ், எழுத்தாளா்கள் அன்பையன், திருவட்டாறு சிந்துகுமாா், இரயுமன் சாகா், சினு ராஜாசிங், வானவில் இலக்கிய வட்டச் செயலா் கே. புஷ்பராஜ் ஆகியோா் பேசினா்.

நாகா்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி முன்னாள் முதல்வா் ஜே.ஆா்.வி. எட்வா்ட், வானவில் இலக்கிய வட்டப் பொருளாளா் ஆல்பா்ட்ராஜ், தக்கலை கலை இலக்கியப் பெருமன்றத் தலைவா் ஹாமிம் முஸ்தபா, என்.டி. தினகா், எழுத்தாளா் ராஜேஷ், டேவிட் மில்டன், சபின் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com