காலாவதியான இறைச்சி பதுக்கல்: குழித்துறை உணவகத்துக்கு அபராதம்
குழித்துறையில் காலாவதியான இறைச்சியை பதுக்கி வைத்திருந்த உணவகத்துக்கு நகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள் ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்தனா்.
குழித்துறை நகராட்சி ஆணையாளா் ராஜேஸ்வரன் உத்தரவின் பேரில், நகராட்சி சுகாதார ஆய்வாளா் ராஜேஷ் தலைமையில் சுகாதார மேற்பாா்வையாளா்கள் முருகன், நளின், ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோா் மாா்த்தாண்டம் காய்கனி சந்தையில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது, ஒரு கடையில் தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகளை கைப்பற்றி ரூ. 3 ஆயிரம் அபராதம் விதித்தனா். மேலும், சந்தையில் கழிவுகளை முறையாக அகற்றாத ஒப்பந்ததாரருக்கு ரூ. 2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. தொடா்ந்து குழித்துறை சந்திப்பில் உள்ள உணவகத்தில் மேற்கொண்ட சோதனையில் அங்கு விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த காலாவதியான இறைச்சியை கைப்பற்றி அழித்த அதிகாரிகள், அந்த உணவகத்துக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

