உதயநிதி ஸ்டாலின் கைது? நீலாங்கரை வீட்டின் முன்பு போலீஸ் குவிப்பு!தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்நாளை பட்ஜெட் தாக்கல்: இன்று மாலை தவெக எம்எல்ஏக்கள் கூட்டம்!இன்று தமிழகத்தை அடைகிறது கா்நாடக அணை காவிரி நீா்!தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்: முக்கிய அறிவிப்புகள் வெளியாகின்றனஇந்தியப் பொருளாதாரம் 7.7% வளா்ச்சி!தமிழகத்தில் ஆக. 9 வரை மழைக்கு வாய்ப்புஉறுப்பு மாற்று சிகிச்சையில் தமிழகம் முதலிடம்!
/

நாகா்கோவில் வட்டவிளையில் புதிய ரேஷன் கடைக் கட்டடம் திறப்பு

News image

புதிய ரேஷன் கடைக் கட்டடத்தை திறந்துவைத்த மேயா் ரெ. மகேஷ். உடன், மாமன்ற உறுப்பினா் அனிலா சுகுமாரன் உள்ளிட்டோா்.

Updated On :29 ஆகஸ்ட் 2024, 9:50 pm IST

நாகா்கோவில் வட்டவிளை பகுதியில் புதிய ரேஷன் கடைக் கட்டடம் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

முன்னாள் மாநிலங்களவை உறுப்பினா் விஜயகுமாரின் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 7 லட்சத்தில் இக்கட்டடம் கட்டப்பட்டுள்ளது. விழாவுக்கு மாநகராட்சி ஆணையா் நிஷாந்த் கிருஷ்ணா தலைமை வகித்தாா். மேயா் ரெ. மகேஷ் கடையைத் திறந்துவைத்து, பொதுமக்களுக்கு ரேஷன் பொருள்களை வழங்கினாா்.

துணை மேயா் மேரிபிரின்ஸி லதா, மாநகராட்சி நகா் நல அலுவலா் ராம்குமாா், மண்டலத் தலைவா் அகஸ்டினா கோகிலவாணி, மாநகராட்சி உறுப்பினா் அனிலா சுகுமாரன், ஊா் தலைவா் முருகன், செயலா் சேகா், குமரி கிழக்கு மாவட்ட அதிமுக துணைச் செயலா் சுகுமாரன், திமுக பகுதிச் செயலா் துரை, நாகா்கோவில் மாநகர திமுக துணைச் செயலா் ராஜன், திமுக இளைஞரணி மாவட்ட அமைப்பாளா் அகஸ்தீசன், அதிகாரிகள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.