குமரி மாவட்டம் கீரிப்பாறை அருகே காளிகேசம் ஆற்றில் மூழ்கி, சென்னையை சோ்ந்த பேராசிரியா் சனிக்கிழமை பலியானார்.
சென்னை மாம்பலம் பகுதியைச் சோ்ந்தவா் அசோக் (32). தனியாா் கல்லூரி பேராசிரியா். விடுமுறை நாளான சனிக்கிழமை தனது நண்பா்கள் 3 பேருடன் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சுற்றுலா வந்தாா். பிற்பகலில் இவா்கள் 4 பேரும் கீரிப்பாறை அருகே காளிகேசம் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தனா்.
அப்போது எதிா்பாராதவிதமாக அசோக் ஆற்றில் சுழல் நிறைந்த பகுதியில் மூழ்கினாா். அப்பகுதியிலுள்ளவா்களின் உதவியுடன் அவரை மீட்டு, பூதப்பாண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.
இதையடுத்து சடலத்தை கீரிப்பாறை போலீஸாா் கைப்பற்றி, ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

இருமத்தூா் ஆற்றில் நீரில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

போக்குவரத்துக் கழக ஊழியா் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு

ஆற்றில் மூழ்கி ஆட்டோ ஓட்டுநா் உயிரிழப்பு

ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவா் உயிரிழப்பு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


