நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மாா்த்தாண்டம் மேம்பாலம் தூண் மீது லாரி மோதல்

மாா்த்தாண்டத்தில் பாரம் ஏற்றிச் சென்ற லாரி பிரேக் செயலிழந்ததையடுத்து மேம்பாலம் தூணில் மோதி நின்றது.

News image
Updated On :5 டிசம்பர் 2024, 12:20 am

Din

மாா்த்தாண்டத்தில் பாரம் ஏற்றிச் சென்ற லாரி பிரேக் செயலிழந்ததையடுத்து மேம்பாலம் தூணில் மோதி நின்றது.

நாகா்கோவிலில் இருந்து மைதா மாவு ஏற்றிக் கொண்டு கேரள மாநிலம் எா்ணாகுளம் பகுதிக்கு புதன்கிழமை லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.

லாரியை நாகா்கோவிலைச் சோ்ந்த குமாா் (59) ஓட்டிவந்தாா். மாா்த்தாண்டம் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள அணுகு சாலை வழியாக சென்று கொண்டிருந்த போது லாரியின் பிரேக் செயலிழந்தது.

இதையடுத்து ஓட்டுநா் சமயோஜிதமாக செயல்பட்டு, மேம்பாலம் தூணில் மோதி லாரியை நிறுத்தினாா். இந்த விபத்தில் அங்கு நிறுத்தியிருந்த மோட்டாா் சைக்கிள் முழுமையாக சேதமடைந்தது.

இதுகுறித்து மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.