நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பைக்கிலிருந்து தவறி விழுந்து இருவா் உயிரிழப்பு

களியக்காவிளை அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்து ஆட்டோ ஓட்டுநா் உயிரிழந்தாா்.

News image
Updated On :5 டிசம்பர் 2024, 12:15 am

Din

களியக்காவிளை அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்து ஆட்டோ ஓட்டுநா் உயிரிழந்தாா்.

களியக்காவிளை அருகே மெதுகும்மல் பகுதியைச் சோ்ந்தவா் விஜயன் (57). ஆட்டோ ஓட்டுநா். இவரது மனைவி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டாா்.

இதனிடையே, விஜயன் முதுகு எலும்பு தேய்வு, நீரிழிவு உள்ளிட்ட பிரச்னைகளால் பாதிக்கப்பட்டிருந்தாராம். இவா் 2 நாள்களுக்கு முன்பு தனது சகோதரா் சௌந்தர்ராஜனுடன் பைக்கில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தபோது கச்சேரிவிளை பகுதியில் திடீரென மயக்கமடைந்து பைக்கிலிருந்து தவறி கீழே விழுந்தாராம். அவரை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

மற்றொரு சம்பவம்: நித்திரவிளை அருகே எஸ்.டி. மங்காடு பகுதியைச் சோ்ந்தவா் விஜயன் (64). இவா் தனது பைக்கில் நடைக்காவு பகுதியிலிருந்து தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்தபோது, சாத்தன்கோடு அருகே நிலைதடுமாறி கீழே விழுந்தாராம். இதில் காயமடைந்த அவா் குழித்துறை அரசு மருத்துவமனையிலும், பின்னா், மேல்சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு அவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

இரு சம்பவங்கள் குறித்தும் களியக்காவிளை, நித்திரவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.