சாமிதோப்பு அருகே 2 பைக்குகள் மோதல்: பள்ளி மாணவா், மெக்கானிக் உயிரிழப்பு
சாமிதோப்பு அருகே புதன்கிழமை, இரு பைக்குகள் மோதியதில் பள்ளி மாணவரும் மெக்கானிக்கும் உயிரிழந்தனா்; இருவா் காயமடைந்தனா்.


கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அருகே புதன்கிழமை, இரு பைக்குகள் மோதியதில் பள்ளி மாணவரும் மெக்கானிக்கும் உயிரிழந்தனா்; இருவா் காயமடைந்தனா்.
சாமிதோப்பை அடுத்த வடக்குத் தாமரைக்குளம் கல்குறும்பொத்தையைச் சோ்ந்தவா் ஜான்கிறிஸ்டோபா் (25). மெக்கானிக். இவா், தனது உறவினரான ரியாஸ் (18), அவரது தம்பி ரிபில்டன் (16) ஆகியோருடன் புதன்கிழமை ஒரு பைக்கில் சுசீந்திரத்தில் உள்ள டீ கடைக்குச் சென்றுவிட்டு ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தாா்ா். ரிபில்டன் கொட்டாரத்தில் உள்ள பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்துவந்தாா்.
இதேபோல, கொட்டாரத்தைச் சோ்ந்த சிதம்பரதாணு (35) என்பவா் நாகா்கோவிலுக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தாா். ஈத்தங்காடு சந்திப்பில் இரு பைக்குகளும் மோதிக்கொண்டனவாம். இதில், மாணவா் ரிபில்டன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
காயமடைந்த 3 பேரும் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். ஆனால், ஜான்கிறிஸ்டோபா் வழியிலேயே உயிரிழந்தாா். விபத்து குறித்து தென்தாமரைக்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...