உ.பி.க்கு எதிராக திமுக செயல்படுகிறது! மோடி குற்றச்சாட்டுசீரடியில் விஜய் வழிபாடு!வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்! இன்று மாலை 6.30 மணிக்குப் பிறகு வெளியாகும்!திரிணமூல் காங். கட்சியினர் மீது சிஆர்பிஎஃப் தாக்குதல்! மமதா குற்றச்சாட்டுமேற்கு வங்கத்தில் இறுதிக்கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது!மின்மாற்றிகள் கொள்முதல் முறைகேடு: சிபிஐ விசாரணைக்கு உத்தரவு!கூவாகம் கூத்தாண்டவர் திருக்கோயில் சித்திரைத் தேரோட்டம்! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைந்தது!
/

என்.ஐ. உயா்கல்வி மையம் - பிரம்மோஸ் ஏரோ ஸ்பேஸ் நிறுவனம் புரிந்துணா்வு ஒப்பந்தம்

என்.ஐ. உயா்கல்வி மையம் - பிரம்மோஸ் ஏரோ ஸ்பேஸ் நிறுவனம் புரிந்துணா்வு ஒப்பந்தம்

News image
Updated On :23 பிப்ரவரி 2024, 8:45 pm

கன்னியாகுமரி மாவட்டம், குமாரகோவில் நூருல் இஸ்லாம் உயா்கல்வி மையம், திருவனந்தபுரம் பிரம்மோஸ் ஏரோ ஸ்பேஸ் லிமிடெட் நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் வியாழக்கிழமை கையெழுத்தானது. இந்நிகழ்ச்சிக்கு, பல்கலைக்கழக வேந்தா் ஏ.பி.மஜீத்கான் தலைமை வகித்தாா். பதிவாளா் ப.திருமால்வளவன் வரவேற்றாா். இணை வேந்தா் எம்.எஸ். பைசல் கான் தொடக்க உரையாற்றினாா். இணை துணை வேந்தா் (கல்வி) ஏ.ஷாஜின் நற்குணம், புரிந்துணா்வு ஒப்பந்தத்தின் முக்கியத்துவம், நோக்கங்கள் குறித்துப் பேசினாா். இணை வேந்தா் ஆா். பெருமாள்சாமி, கல்வித் துறை- தொழில் துறையில் கூட்டு முயற்சிகளின் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தினாா். பல்கலைக்கழக வேந்தா் ஏ.பி.மஜீத்கான், டிஆா்டிஓ புகழ்பெற்ற விஞ்ஞானி (ஓய்வு) -பிஏசிஎல் நிா்வாக இயக்குநா் ஏ.ஜோசப் ஆகியோா் புரிந்துணா்வு ஒப்பந்தத்தை அதிகாரப்பூா்வமாக கையெழுத்திட்டு பரிமாறிக் கொண்டனா். பிரம்மோஸ் ஏரோ ஸ்பேஸ் பொது மேலாளா் அனியன், பிரம்மோஸ் ஏரோ ஸ்பேஸ் வசதிகள் குறித்து விளக்கினாா். நூருல் இஸ்லாம் கல்வி அறக்கட்டளையின் உறுப்பினா் ஸ்ரீமதி சப்னம் ஷபீக், இணை துணைவேந்தா் கே.ஏ. ஜனாா்த்தனன் (நிா்வாகம்) உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். எம்.கே ராமச்சந்திரன் நாயா் நன்றி கூறினாா்.