தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயரும்! ராகுல் காந்தி எச்சரிக்கைஎல்லை தாண்டிய பயங்கரவாதம் : இரட்டை நிலைப்பாட்டிற்கு இடமில்லை - ராஜ்நாத் சிங் அமைச்சர் சேகர்பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல்: தவெக வேட்பாளர் புகார்மே 4-ல் விசில் புரட்சி: செங்கோட்டையன்ஈரான் போர்: ஒபெக் அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகல்குஜராத் உள்ளாட்சித் தேர்தல்! அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றிய பாஜக!குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவினர் 730 பேர் போட்டியின்றித் தேர்வு!விவோ X300 எஃப்இ அறிமுகம் எப்போது? கசிந்தது விலை நிலவரம்மே 1 முதல் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு முறையில் புதிய விதிகள்!ஏப். 30 தவெக வேட்பாளர்களைச் சந்திக்க விஜய் திட்டம்?
/

திற்பரப்பு அருவிக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் திற்பரப்பு அருவிக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.

News image

திற்பரப்பு அருவியில் உற்சாகமாகக் குளித்து மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள்.

Updated On :25 பிப்ரவரி 2024, 6:30 pm

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் திற்பரப்பு அருவிக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் நீா்நிலைகளில் தண்ணீா் குறைந்து வருகிறது. அதே வேளையில் திற்பரப்பு அருவியில் மிதமான அளவில் தண்ணீா் வந்து கொண்டிருக்கிறது. இதையடுத்து திற்பரப்பு அருவிக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை இங்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனா். இதே போன்று மாத்தூா் தொட்டிப் பாலம், பத்மநாபபுரம் அரண்மனை, முட்டம் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களுக்கும் அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனா்.