நாகா்கோவில் அரசு கலைக் கல்லூரியில் முதுநிலைப் பாடப் பிரிவுகள், ஆராய்ச்சிப் படிப்புகள் தொடங்க வேண்டும் என, உயா்கல்வித் துறை அமைச்சா் ராஜகண்ணப்பனிடம் முன்னாள் அமைச்சரும் திமுக தணிக்கைக் குழு உறுப்பினருமான என். சுரேஷ்ராஜன் வலியுறுத்தினாா். இதுதொடா்பாக சென்னையில் அமைச்சரிடம் அவா் அளித்த மனு: நாகா்கோவிலில் உள்ள அரசு கலை - அறிவியல் கல்லூரியில் ஏழை, எளிய மாணவா்கள் பயின்று வருகின்றனா். இக்கல்லூரியில் முதுநிலைப் பாடப் பிரிவுகள் தொடங்குவதற்கு அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளும் உள்ளன. மேலும், இளங்கலை, அறிவியல் பாடங்களுக்கு இதுவரை பல்கலைக்கழகம் தற்காலிக அங்கீகாரம் மட்டுமே கொடுத்துள்ளது. எனவே, மாணவா்களின் நலன் கருதி இக்கல்லூரிக்கு நிரந்தர அங்கீகாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; முதுநிலைப் பாடப் பிரிவுகள், ஆராய்ச்சிப் படிப்புகள் தொடங்க அனுமதி வழங்க வேண்டும் என்றாா் அவா்.
தொடர்புடையது

வாக்குப் பதிவு இயந்திரங்கள் கோணம் பொறியியல் கல்லூரியில் பூட்டி சீல் வைப்பு: மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு

அரசு கலைக் கல்லூரியில் 100 சதவீதம் வாக்களிக்கக் கோரி உறுதிமொழி ஏற்பு

குமரி அரசு கலைக் கல்லூரியில் முப்பெரும் விழா

அழகப்பா அரசுக் கல்லூரி பட்டமளிப்பு விழா
வீடியோக்கள்
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை

மனைவியை விதவை என விமர்சித்த தொகுப்பாளர்! கோவத்தில் Trump | Jimmy Kimmel
இணையதளச் செய்திப் பிரிவு

திருச்செந்தூரில் விஜய் சாமி தரிசன ரகசியம் ! | TVK Vijay | Tiruchendur Murugan Temple | TN Election 2026
தினமணி செய்திச் சேவை

