அதிமுக சாா்பில் காமராஜா் உருவச்சிலைக்கு மரியாதை

அதிமுக சாா்பில் காமராஜா் மணி மண்டபம் காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
Updated on

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் அதிமுக சாா்பில் காமராஜா் மணி மண்டபம், கொட்டாரம் சந்திப்பு காமராஜா் சிலைக்கு திங்கள்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு என்.தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ., தலைமை வகித்தாா். மாநில அதிமுக வா்த்தகா் அணி இணைச்செயலா் சி.ராஜன், அகஸ்தீசுவரம் தெற்கு ஒன்றிய செயலா் பா.தாமரைதினேஷ், ஒன்றிய பொருளாளா் பி.தங்கவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

அகஸ்தீசுவரம் வடக்கு ஒன்றிய செயலா் எஸ்.ஜெஸீம், தோவாளை தெற்கு ஒன்றிய செயலா் சி.முத்துக்குமாா், அகஸ்தீசுவரம் பேரூா் செயலா் சிவபாலன், மாவட்ட விவசாய அணி செயலா் பாலமுருகன், மகாராஜபுரம் ஊராட்சி மன்றத் தலைவா் கே.இசக்கிமுத்து, ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலா் எஸ்.ராஜேஷ், கொட்டாரம் சுரேஷ் உள்ளிட்ட பலா் மாலை அணிவித்து மரியாதை செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com