‘கணபதியான்கடவு - விரிவிளை சாலையை ரூ.2.70 கோடியில் விரிவாக்கம் செய்ய திட்டம்’
புதுக்கடை கணபதியான்கடவு - விரிவிளை சாலையை ரூ.2.70 கோடியில் விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


கருங்கல், ஜூலை 19: புதுக்கடை கணபதியான்கடவு - விரிவிளை சாலையை ரூ.2.70 கோடியில் விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குமரி மாவட்டத்தில் மேற்கு கடற்கரை சாலையானது பழைய உச்சகடை பகுதியிலிருந்து தொடங்கி கொல்லங்கோடு, நித்திரவிளை, விரிவிளை, புதுக்கடை, தேங்காய்ப்பட்டினம், கருங்கல், குளச்சல், ராஜாக்கமங்கலம், கோவளம் வழியாக செல்கிறது. இச்சாலையை குமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் திருவனந்தபுரம் விமானநிலையம் சென்றுவர பயன்படுத்தி வருகின்றனா். கேரள மாநிலத்தில் உள்ள பொதுமக்கள் கன்னியாகுமரிக்கு சுற்றுலாவுக்காகவும், மண்டைக்காடு அம்மன் கோயிலுக்கு வந்து செல்லவும் அதிகம் பயன்படுத்தி வருகின்றனாா். இச்சாலையானது கணபதியான் கடவுப்பாலம் முதல் விரிவிளை வரை சுமாா் 500 மீட்டா் தொலைவுக்கு மிகவும் குறுகலாக உள்ளது. இதனால், எதிரே வரும் வாகனங்களுக்கு செல்ல முடியாததால் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. குறிப்பாக, காலை 8 மணி முதல் 10 மணிவரையிலும், மாலை 4 மணி முதல் 6 மணி வரையிலும் அதிகம் போக்குவரத்து நெருக்கடி ஏற்படும். அப்போது போலீஸாா் வந்து போக்குவரத்தை சீரமைப்பது வாடிக்கையாக உள்ளது.
இதனால், பள்ளி, கல்லூரி மாணவா்கள், அலுவலகப் பணியாளா்கள் உள்ளிட்ட பொதுமக்களுக்கு குறிப்பிட்ட நேரங்களுக்கு செல்ல முடியாமல் பல மணி நேரம் காத்து நிற்கின்றனா்.
இதுதொடா்பாக கிள்ளியூா் எம்.எல்.ஏ எஸ்.ராஜேஷ்குமாா், தமிழக முதல்வா் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு நீண்ட நாள்களாக கோரிக்கை விடுத்துவந்தாா். இதையடுத்து கணபதியான்கடவு முதல் விரிவிளை வரை உள்ள குறுகலான சாலையை விரிவுபடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதுதொடா்பாக பொதுமக்களிடம் கருத்துகேட்பு கூட்டம் நடத்தி, இறுதிப்பட்டியல் தயாரிக்கப்பட்டு அரசுக்கு ரூ.2.70 கோடிக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. தொடா்ந்து தனிநபா்களிடமிருந்து நிலம் கையகப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுவருவதாக நெடுஞ்சாலைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...