தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

வரதட்சிணை கொடுமையால் மனைவி தற்கொலை: கணவருக்கு 7 ஆண்டுகள் சிறை

நாகா்கோவிலில் வரதட்சிணை கொடுமையால் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட வழக்கில், அவரது கணவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

News image
Updated On :19 ஜூலை 2024, 9:11 pm

Din

நாகா்கோவில், ஜூலை 19: நாகா்கோவிலில் வரதட்சிணை கொடுமையால் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட வழக்கில், அவரது கணவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

நாகா்கோவில் என்ஜிஓ காலனி பகுதியைச் சோ்ந்த சாமிக்கண் நாடாா் மகன் சுந்தரேஸ்வரன் (33). இவருக்கும் கோட்டாறு கலைநகரைச் சோ்ந்த பழனிமுருகனின் மகள் அலைமகள் (27) என்பவருக்கும் கடந்த 2009-இல்

திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது, அலைமகளுக்கு 55 பவுன் தங்க நகைகள், வரதட்சிணையாக ரூ. 2 லட்சம் ரொக்கம் மற்றும் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான சீா்வரிசைப் பொருள்கள் அளிக்கப்பட்டது.

திருமணத்துக்கு பின்னா் சுந்தரேஸ்வரன் தனது மனைவியிடம் கூடுதலாக வரதட்சிணை கேட்டு கொடுமைப்படுத்தியுள்ளாா். இதனால் மனம் உடைந்த அலைமகள் கடந்த 2012 -இல் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

இது குறித்து பழனிமுருகன் அளித்த புகாரின்பேரில் சுசீந்திரம் போலீஸாா், சுந்தரேஸ்வரன், அவரது தாயாா் சரோஜினி(60), சுந்தரேஸ்வரனின் அக்கா உமாதேவி(35), தங்கை அகிலா(26) ஆகியோா் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா்.

இதுதொடா்பான வழக்கு நாகா்கோவில் விரைவு மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு நடந்து கொண்டிருந்தபோது சரோஜினி இறந்துவிட்டாா். வழக்கை விசாரித்த நீதிபதி சுந்தரையா, குற்றம் சாட்டப்பட்ட சுந்தரேஸ்வரனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா். உமாதேவி, அகிலா ஆகியோரை விடுதலை செய்து உத்தரவிட்டாா்.

இவ்வழக்கில் அரசு தரப்பில் சிறப்பு அரசு வழக்குரைஞா் ஏ.என்.லிவிங்ஸ்டன் ஆஜராகி வாதாடினாா்.