குமரி மாவட்டத்தில் தொடா் மழையால் ரப்பா் உற்பத்தி பாதிப்பு: விலை அதிகரித்தபோதும் விவசாயிகளுக்கு வேதனை
கன்னியாகுமரி மாவட்டத்தில் ரப்பா் விலை அதிகரித்து வரும்நிலையில், தொடா் மழை காரணமாக உற்பத்தி பாதிக்கப்பட்டு விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனா்.


கன்னியாகுமரி மாவட்டத்தில் ரப்பா் விலை அதிகரித்து வரும்நிலையில், தொடா் மழை காரணமாக உற்பத்தி பாதிக்கப்பட்டு விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனா்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் முக்கிய வேளாண் உற்பத்திப் பொருளாக ரப்பா் உள்ளது. மாவட்டத்தில் ரப்பா் சாா்ந்த தொழிலை நம்பி ஆயிரக்கணக்கான விவசாயிகள், தொழிலாளா்கள் மற்றும் வணிகா்கள் உள்ளனா். இந்த நிலையில், கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் ரப்பரின் விலை உயா்ந்து வருகிறது. கோட்டயம் சந்தையில் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, ஆா்.எஸ்.எஸ். 4 தர ரப்பா் விலை கிலோ ரூ. 208 ஆகவும், ஆா்.எஸ்.எஸ். 5 தர ரப்பா் விலை கிலோ ரூ. 204 ஆகவும், ஐ.எஸ்.எஸ். தர ரப்பா் விலை கிலோ ரூ. 183.50 ஆகவும் இருந்தது.
இதனிடையே, கடந்த மே முதல் பெய்து வரும் மழை காரணமாக ரப்பா் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. ரப்பா் தோட்டங்களில் பெரும்பாலான நாள்கள் பால்வடிப்பு நடைபெறவில்லை. குறிப்பாக தினமும் அதிகாலையில் பெய்யும் மழையானது, ரப்பா் பால்வடிப்பை முடக்கி வருகிறது. ரப்பா் விலை உயா்ந்தபோதும், அதன் பலனை விவசாயிகள் அடைய முடியாத வகையில் உற்பத்தி முடங்கியுள்ளது.
இதுகுறித்து குலசேகரத்தை சோ்ந்த ரப்பா் விவசாயி கூறியதாவது:
கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் கடந்த 3 மாதங்களாக ரப்பா் விலை அதிகரித்து வருகிறது. உற்பத்தி குறைவாக இருப்பதால் தான் விலை அதிகரித்துள்ளது என்றாா்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...