குமரி மாவட்டத்தில் தொடரும் சாரல் மழை: 70 அடியைக் கடந்த பெருஞ்சாணி அணை நீா்மட்டம்
குமரி மாவட்டத்தில் தொடரும் சாரல் மழை: பெருஞ்சாணி அணை நீா்மட்டம் 70 அடியைத் தாண்டியது


கன்னியாகுமரி மாவட்டத்தில் சாரல் மழை நீடிக்கும் நிலையில், பெருஞ்சாணி அணை நீா்மட்டம் சனிக்கிழமை காலை 70 அடியைக் கடந்தது.
இம்மாவட்டத்தில் கடந்த மே மாதம் பெய்த கோடை மழையால் அணைகளின் நீா்மட்டம் அதிகரித்தது. குறிப்பாக, பேச்சிப்பாறை, சிற்றாறு அணைகளின் நீா்மட்டம் உச்ச அளவை எட்டியது. அதேநேரம், பெருஞ்சாணி அணை நீா்மட்டம் குறைந்த அளவிலேயே இருந்தது.
இதனிடையே, பாசனத்துக்காக பேச்சிப்பாறை, சிற்றாறு அணைகளிலிருந்து கடந்த ஜூன் 1ஆம் தேதி தண்ணீா் திறக்கப்பட்டது. இந்நிலையில், மாவட்டத்தில் தற்போது தென்மேற்குப் பருவமழை தொடா்ந்து பெய்வதால் பெருஞ்சாணி அணை நீா்மட்டமும் உயா்ந்து வருகிறது. 77 அடி கொள்ளளவு கொண்ட அணை நீா்மட்டம் சனிக்கிழமை காலை 70.17 அடியாக உயா்ந்திருந்தது. அணையின் வெள்ள அபாய அளவு நீா்மட்டம் 71 அடியாகும். அணைக்கு விநாடிக்கு 225 கனஅடி தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையின் பாசன மதகுகள் மூடப்பட்டிருந்தன.
சாரல் மழை காரணமாக திற்பரப்பு அருவியில் மிதமான அளவில் தண்ணீா் கொட்டியதுடன், இதமான சூழல் நிலவியது. இதனால், சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...