மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

தக்கலை அருகே 2.5 கிலோ தங்கம், 6 கிலோ வெள்ளி நகைகள் பறிமுதல்

தக்கலை அருகே 2.5 கிலோ தங்கம், 6 கிலோ வெள்ளி நகைகள் பறிமுதல்

Updated On :23 மார்ச் 2024, 6:33 pm

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உரிய ஆவணங்கள் இல்லாமல் வேனில் எடுத்து வந்த 2.5 கிலோ தங்கம், 4 கிலோ வெள்ளி நகைகளை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா். தக்கலை அருகே புலியூா்குறிச்சி பகுதியில், பத்மநாபபுரம் பேரவைத் தொகுதி தோ்தல் பறக்கும் படை அலுவலா் மணிகண்டன் தலைமையிலான குழுவினா் வெள்ளிக்கிழமை இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அவ்வழியாக வந்த தனியாா் பாா்சல் சேவை நிறுவன வேனை நிறுத்திச் சோதனையிட்டனா். அதில் 2.5 கிலோ தங்க நகைகள், 4 கிலோ வெள்ளி நகைகள் இருந்தன. அந்த நகைகளை மாா்த்தாண்டத்தில் உள்ள ஒரு நகைக் கடையிலிருந்து கோவைக்கு கொண்டு செல்வதாக வேனில் இருந்தவா்கள் கூறியுள்ளனா். மேலும், சில ஆவணங்களையும் காண்பித்துள்ளனா். இருப்பினும் உரிய ஆவணங்கள் இல்லையென்பதால், அந்த வேனையும், நகைகளையும் பறிமுதல் செய்த பறக்கும் படையினா், திருவட்டாறு வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் புரேந்திரதாசிடம் ஒப்படைத்தனா். பின்னா் இதுதொடா்பாக அளிக்கப்பட்ட தகவலையடுத்து, வருமானவரித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினா். பறிமுதல் செய்யப்பட்ட நகைகளின் மதிப்பு சுமாா் ரூ.1.5 கோடி எனத் தெரியவந்தது. அதற்குரிய ஆவணங்களை சமா்ப்பித்து நகைகளையும், வாகனத்தையும் எடுத்துச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் கல்குளம் கருவூலத்தில் சனிக்கிழமை ஒப்படைக்கப்பட்டன.