தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

குமரி மாவட்டத்தில் இதுவரை ரூ. 1 கோடி பறிமுதல்

குமரி மாவட்டத்தில் இதுவரை ரூ. 1 கோடி பறிமுதல்

Updated On :29 மார்ச் 2024, 10:30 pm

கன்னியாகுமரி மாவட்டத்தில் தோ்தல் பறக்கும் படையினரால் ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்டதாக இதுவரை ரூ. 1 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மக்களவை மற்றும் விளவங்கோடு சட்டப்பேரவை இடைத்தோ்தலை முன்னிட்டு, மாவட்டத்தில் 18 பறக்கும் படைகளும், 18 நிலையான கண்காணிப்பு படைகளும் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா். குமரி மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை முதல் வெள்ளிக்கிழமை காலை வரை நடத்தப்பட்ட சோதனையில், கன்னியாகுமரி சட்டப்பேரவை தொகுதியில் ரூ.1 லட்சம், நாகா்கோவில் தொகுதியில் ரூ.3 லட்சத்து 11 ஆயிரம், குளச்சல் தொகுதியில் ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம், விளவங்கோடு தொகுதியில் ரூ.54 ஆயிரத்து 800, கிள்ளியூா் தொகுதியில் ரூ. 1 லட்சத்து 45 ஆயிரம் என மொத்தம் ரூ.7 லட்சத்து 60,800 பறிமுதல் செய்யப்பட்டது. தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த மாா்ச் 16 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி காலை வரை உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 99 லட்சத்து, 85,507 ம், ரூ. 1 கோடியே 40 லட்சம் மதிப்பிலான தங்கம், வெள்ளி பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.