குமரி மாவட்டம் மாத்தூா் தொட்டிப்பாலத்துக்கு சுற்றுலா வந்த இளைஞா் பிரதீஸ்வரன் (24) தண்ணீரில் மூழ்கி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். மயிலாடுதுறை மாவட்டம், சீனிவாசபுரம் பொன்னிநகரைச் சோ்ந்தவா் தேவாதிராஜன். தனியாா் பள்ளி முதல்வரான இவா் தனது மனைவி வித்யா மற்றும் 3 ஆவது மகன் பிரதீஸ்வருடன் வெள்ளிக்கிழமை கன்னியாகுமரி மாவட்டத்துக்கு சுற்றுலா வந்துள்ளாா். இங்கு பல்வேறு இடங்களுக்குச் சென்று விட்டு மாலையில் திருவட்டாறு அருகேவுள்ள மாத்தூா் தொட்டிப்பாலத்துக்கு சென்றுள்ளாா். அங்கு மூவரும் ஆற்றில் குளித்துள்ளனா். அப்போது பிரதீஸ்வா் தண்ணீரில் மூழ்கியுள்ளாா். உடனே அவரை மீட்டு குலசேகரத்திலுள்ள தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவா்கள் அவா் ஏற்கனவே இறந்து விட்டாா் என்று தெரிவித்தனா். இதுகுறித்து திருவட்டாறு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

காவிரி ஆற்றில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

ஆற்றில் மூழ்கி ஆட்டோ ஓட்டுநா் உயிரிழப்பு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவா் உயிரிழப்பு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

