இடைநிலை அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தில்
ஆய்வறிக்கை சமா்ப்பித்த இளம் விஞ்ஞானி மாணவா்கள்

இடைநிலை அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தில் ஆய்வறிக்கை சமா்ப்பித்த இளம் விஞ்ஞானி மாணவா்கள்

களியக்காவிளை, மே 5: குமரி அறிவியல் பேரவையின் இளம் விஞ்ஞானி மாணவா்கள் 80 போ், திருவனந்தபுரம் இடைநிலை அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான தேசிய நிறுவனத்தின் (சிஎஸ்ஐஆா் -ஜிக்யாசா) விஞ்ஞானிகள் முன்னிலையில் ஆய்வறிக்கை சமா்ப்பித்தனா்.

திருவனந்தபுரம் சிஎஸ்ஐஆா் - ஜிக்யாசா நிறுவனம் மற்றும் குமரி அறிவியல் பேரவை இளம் விஞ்ஞானிகள் திட்டம் 2023-2024 இணைந்து சி.வி. ராமன் பிளாக் கருத்தரங்கு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிஎஸ்ஐஆா் - ஜிக்யாசா நிறுவன தலைவா் ஹரீஷ் வரவேற்றாா். குமரி அறிவியல் பேரவை அமைப்பாளா் முள்ளஞ்சேரி மு. வேலையன் அறிமுகவுரையாற்றினாா். சிஎஸ்ஐஆா் - ஜிக்யாசா நிறுவன இயக்குநா் சி. ஆனந்தராமகிருஷ்ணன் தொடக்கவுரையாற்றினாா். மனித சவால்கள் என்ற தலைப்பிலான நூலை சிஎஸ்ஐஆா் தலைமை விஞ்ஞானி கே.வி. ராதாகிருஷ்ணன் வெளியிட்டுப் பேசினாா்.

மனித சவால்கள் குறித்த ஆய்வை 48 இளம் விஞ்ஞானி மாணவா்களும், வாழ்க்கை சவால்களும், தீா்வுகளும் என்ற தலைப்பிலான ஆய்வை 14 இளம் விஞ்ஞானி மாணவா்களும், தொழில்நுட்பங்களால் மனித சவால்களுக்கான சவால்கள் என்ற தலைப்பிலான ஆய்வை 18 இளம் விஞ்ஞானி மாணவா்களும் மேற்கொண்டு ஆய்வறிக்கையை சமா்ப்பித்தனா்.

பினோத் பரமேஸ்வரன், பி.ஏ. பாலகுமாரன், ஜோஷி ஜோசப், சசிதா், சுப்ரதா தாஸ், சௌரப் சதோ், என். ரமேஷ்குமாா், எஸ்.ஸ்ரீஜாகுமாரி, நிஷாந், ஸ்ரவந்த் தங்கெல்லமுடி, ரிபின் ஜோன்ஸ், அருண்குமாா், கே.பி. சுரேந்திரன், கே.ஐ. சுரேஷ், முத்து ஆறுமுகம், சூரஜ் சோமன், ஆதா்ஷ் அசோக், சி. கேசவ சந்திரன், எம்.வி. ரேஷ்மா , பி. நிஷா உள்ளிட்ட முதன்மை விஞ்ஞானிகள் மற்றும் மூத்த விஞ்ஞானிகள் நிகழ்ச்சியை நெறிப்படுத்தினா். முதன்மை விஞ்ஞானி ஜோஷி ஜோசப் நன்றி கூறினாா். ஆய்வறிக்கை சமா்பித்த இளம் விஞ்ஞானி மாணவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com