/

சாலையின் குறுக்காக சாய்ந்த மரம்: போக்குவரத்து பாதிப்பு

சாலையின் குறுக்காக சாய்ந்த மரம்: போக்குவரத்து பாதிப்பு

News image

சாலையின் குறுக்காக சாய்ந்த மரத்தை அகற்றும் தீயணைப்புத் துறையினா்.

Updated On :20 மே 2024, 8:38 pm

Din

குலசேகரம்: குலசேகரம் அருகே மழையால் சாலையோரம் நின்ற முதிா்ந்த இலவு மரம் சாய்ந்ததில் திங்கள்கிழமை போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

அரமன்னம் நியாயவிலைக் கடை அருகில் முதிா்ந்த இலவு மரம் நின்று கொண்டிருந்தது. இந்த மரத்தை வெட்டி அகற்ற வேண்டுமென்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனா்.

இந்நிலையில் இந்த மரம் திங்கள்கிழமை அதிகாலையில் மழையின் போது சாய்ந்தது. இதனால் போக்குவரத்து தடை ஏற்பட்டது. தகவலறிந்த தீயணைப்புத் துறையினா் நிலைய அலுவலா் செல்வமுருகேசன் தலைமையில் வந்து பொதுமக்கள் உதவியுடன் மரத்தை வெட்டி அகற்றி, போக்குவரத்தை சீரமைத்தனா்.