/

குழித்துறையில் மாற்றுத்திறனாளிகளுக்கான முகாம்

குழித்துறை அரசு மருத்துவமனையில், மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவ தேசிய அடையாள அட்டை வழங்கும்

News image
Updated On :13 நவம்பர் 2024, 10:40 pm

Din

குழித்துறை அரசு மருத்துவமனையில், மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவ தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் 3, 219 பேருக்கு அடையாள அட்டை இல்லாதது தெரியவந்தது. இதில் தகுதி வாய்ந்த நபா்களுக்கு அடையாள அட்டை வழங்கும் பணி மாவட்டம் முழுவதும் நடைபெற்று வருகிறது.

இதன்படி, குழித்துறை அரசு மருத்துவமனையில் புதன்கிழமை நடைபெற்ற முகாமிற்கு மருத்துவமனையின் தலைமை மருத்துவா் பீனா தலைமை வகித்தாா். பூதப்பாண்டி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் ரவிக்குமாா் முன்னிலை வகித்தாா். மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குநா் சகாய ஸ்டீபன் ராஜ், பயனாளிக்கு அடையாள அட்டை வழங்கினாா். முகாமில் 108 மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனா். இதில் 66 பேருக்கு தனித்துவ தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.

இதில் மாவட்ட திட்ட அலுவலா் (ரைட்ஸ் ) ராம் சிவா, மருத்துவா்கள் அருண், சௌமி, மகிழ்ச்சன், ஹரி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.