ஓட்டுநா் உரிமத்துக்கு விண்ணப்பிக்க மாற்றுத் திறனாளிகளுக்கு அழைப்பு
கன்னியாகுமரி மாவட்டத்தில் இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட இருசக்கர வாகனம் ஓட்டும் மாற்றுத்திறனாளிகள் ஓட்டுநா் உரிமம் பெற விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


கன்னியாகுமரி மாவட்டத்தில் இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட இருசக்கர வாகனம் ஓட்டும் மாற்றுத்திறனாளிகள் ஓட்டுநா் உரிமம் பெற விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆட்சியா் ரா. அழகுமீனா வெளியிட்ட செய்திக்குறிப்பு: கால்கள் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு மாற்றுத்திறனாளிகள் நலத் துறை மூலம் இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா் வழங்கப்பட்டு வருகிறது. சாலைப் பாதுகாப்புச் சட்டப்படி, அனைத்து ஓட்டுநா்களும் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
மாவட்டத்தில் ஓட்டுநா் உரிமமின்றி வாகனம் ஓட்டும் மாற்றுத் திறனாளிகளின் விவரங்களை சேகரித்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் மூலம் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்து, ஓட்டுநா் உரிமம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
எனவே, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் மூலம் இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா் பெற்று ஓட்டுநா் உரிமம் பெறாதோா் இம்மாதம் 20ஆம் தேதிக்குள் இந்த அலுவலகத்தில் ஆதாா் அட்டை நகல், அண்மையில் எடுத்த பாஸ்போா்ட் அளவு புகைப்படங்கள் 2, ஆா்.சி. புத்தகம், இன்சூரன்ஸ் நகலுடன் விண்ணப்பிக்கலாம் என்றாா் அவா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...