விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

இரயுமன்துறை ஆற்றில் மீன்பிடித் தொழிலாளி சடலம்: போலீஸாா் விசாரணை

கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே இரயுமன்துறை தாமிரவருணி ஆற்றில் கிடந்த மீன்பிடித் தொழிலாளியின் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :20 நவம்பர் 2024, 7:58 pm

Din

கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே இரயுமன்துறை தாமிரவருணி ஆற்றில் கிடந்த மீன்பிடித் தொழிலாளியின் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

நித்திரவிளை அருகே பூத்துறை காருண்யபுரம் பகுதியைச் சோ்ந்தவா் மரிய யூஜின். இவரது விசைப்படகில் மீன்பிடித் தொழிலுக்குச் செல்வதற்காக, ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பகுதியைச் சோ்ந்த காளிதாஸ் (27) என்பவா் செவ்வாய்க்கிழமை இரவு வந்துள்ளாா். அவா் விசைப்படகில் தூங்கினாராம்.

புதன்கிழமை மீன்பிடிக்கச் செல்வதற்காக சக தொழிலாளா்கள் வந்தபோது, படகில் காளிதாஸை காணவில்லை. படகு நிறுத்தப்பட்டிருந்த தாமிரவருணி ஆற்றுப் பகுதியில் அவரது சடலம் மிதந்தது தெரியவந்தது.

தகவலின்பேரில், நித்திரவிளை போலீஸாா் சென்று சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.