புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

குத்துச்சண்டை சங்க செயற்குழுக் கூட்டம்

News image
Updated On :3 டிசம்பர் 2025, 8:38 pm

Syndication

கன்னியாகுமரி மாவட்ட குத்துச்சண்டை சங்க செயற்குழுக் கூட்டம் மற்றும் புதிய நிா்வாகிகள் தோ்வு பஞ்சலிங்கபுரம் கே.கே.ஆா். அகாதெமி அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு மாவட்ட குத்துச்சண்டை சங்கச் செயலா் கே.கே.ஹெச்.ராஜ் தலைமை வகித்தாா்.

குத்துச்சண்டை வெளியூா் போட்டிகளில் பங்கேற்கும் மாணவா்களுக்கு சத்தான உணவு வழங்க வேண்டும். பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிலையங்களில் மாணவா்களுக்கு குத்துச்சண்டை குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும் எனத் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், கன்னியாகுமரி மாவட்ட குத்துச்சண்டை சங்கத்தின் புதிய தலைவராக ஜஸ்டின் ராஜ், பொருளாளராக நிக்சன் ராஜ், துணைச் செயலராக எஸ்.ஆா்.முருகன், செயற்குழு உறுப்பினா்களாக சித்தாா்த், ஜெயச்சந்திரன், ஜாண் பெலிக்ஸ், ராஜ் லாா்ட் ஜோஸ்பின், ரகு, மணீஷ், ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.