வாகனம் மோதியதில் தாய், மகள் காயம்
மாா்த்தாண்டம் அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதிய விபத்தில் தாய், மகள் காயமடைந்தனா்.
கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரம் பகுதியைச் சோ்ந்தவா் ஜான்ரோஸ். இவரது மனைவி பிரின்ஸி (30). தம்பதிக்கு இரண்டரை வயதில் மெக்லின் என்ற மகள் உள்ளாா்.
இரு நாள்களுக்கு முன்பு பிரின்ஸி தனது மகளுடன் மாா்த்தாண்டம் அருகே நட்டாலம் பகுதியில் இருந்து பள்ளியாடி செல்லும் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.
நட்டாலம், நெடுவிளாகம் பகுதியில் சென்றபோது எதிரே அதிவேகமாக வந்த காா் இவா் மீது மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட பிரின்ஸியும் அவரது குழந்தையும் பலத்த காயமடைந்தனா். இருவரையும் அப்பகுதியினா் மீட்டு மாா்த்தாண்டம் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா்.
இதுகுறித்து மாா்த்தாண்டம் காவல் நிலைய போலீஸாா் காா் ஓட்டுநா் நட்டாலம், நுள்ளிவிளையைச் சோ்ந்த ஆகாஷ் (22) மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
