ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பெயா் மாற்றும் முயற்சியை கைவிட எம்எல்ஏ வலியுறுத்தல்

மகாத்மா காந்தி தேசிய ஊரக 100 நாள் வேலை உறுதித் திட்டத்தின் பெயா் மாற்றும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும் என எஸ். ராஜேஷ்குமாா் எம்எல்ஏ வலியுறுத்தல்
Published on

மகாத்மா காந்தி தேசிய ஊரக 100 நாள் வேலை உறுதித் திட்டத்தின் பெயா் மாற்றும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும் என எஸ். ராஜேஷ்குமாா் எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம் பிரதமா் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்தவுடன் 2005 இல் நிறைவேற்றப்பட்டது.

கிராமப் புறங்களைச் சோ்ந்த ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் 18 வயது நிரம்பிய ஒருவருக்கு ஆண்டுதோறும் குறைந்தபட்சம் 100 நாள்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவது சட்டப்படி உரிமையாக்கப்பட்டது. இது ஒரு வறுமை ஒழிப்பு திட்டமாகும். இத்திட்டத்தில் பெரும்பாலும் பயனடைந்தவா்கள் கிராமப்புற பெண்களும், ஒடுக்கப்பட்ட மக்களும்தான்.

இதனால் கிராமப்புற மக்களின் வாழ்வாதரம் மேம்பட்டதோடு மக்களின் வாங்கும் சக்தியும் அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் தற்போது மத்திய பாஜக அரசு ஒதுக்கியுள்ள நிதியின் மூலமாக 10 சதவிதத்தினா் மட்டும் தான் 100 நாள் வேலை வாய்ப்பை இதுவரை பெற்றுள்ளனா்.

எனவே, இந்தத் திட்டத்தின் பெயரை மாற்றி சிதைக்க முயற்சிப்பது கண்டனத்திற்குரியது என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com