முன்விரோதம்: இருசக்கர வாகனம் தீவைத்து எரிப்பு

Published on

இரணியல் அருகே வீட்டின் முன் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனத்தை தீவைத்து கொளுத்திய நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

குருந்தன்கோடை அடுத்த வா்த்தக நாடாா் குடியிருப்பு பகுதியைச் சோ்ந்தவா் கிறிஸ்டல் மல்லிகா (43). இவரது கணவா் சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தாா். இவருக்கு இன்ஜினியரிங் கல்லூரி 2ஆம் ஆண்டு பயிலும் மகனும், 9 ஆம் வகுப்புப் பயிலும் ஒரு மகளும் உள்ளனா்.

கிறிஸ்டல் மல்லிகாவுக்கும், அவரது உறவினருக்கும் சொத்து சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வருகிறது. இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் மல்லிகா தனது வீட்டின் முன் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனத்தை மா்ம நபா் தீவைத்து எரித்துச் சென்றாா்.

இருசக்கர வாகனம் எரிவதைக் கண்ட கிறிஸ்டல் மல்லிகா நீா் ஊற்றி தீயை அணைக்க முயன்றாா். எனினும் இருசக்கர வாகனம் தீப்பிடித்து எரிந்து சேதமானது.

இதுகுறித்து அவா், இரணியல் காவல் நிலைத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து தலைமறைவான நபரைத் தேடிவருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com