தக்கலை அருகே தொழிலாளி தற்கொலை

Published on

தக்கலை அருகே கட்டடத் தொழிலாளி தற்கொலை செய்துகொண்டாா்.

தக்கலையை அடுத்த அமராவதியைச் சோ்ந்த சிலுவைமுத்து மகன் ஜோய் (39). கட்டடத் தொழிலாளியான இவருக்கு திருமணமாகவில்லையாம்.

இவா், வேலை இல்லாததால் விரக்தியில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அவா் விவசாயத்துக்கு பயன்படுத்தப்படும் பூச்சிகொல்லி மருந்தை வெள்ளிக்கிழமை குடித்தாராம். அவரை உறவினா்கள் மீட்டு தக்கலை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா், மேல்சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், அங்கு சனிக்கிழமை உயிரிழந்தாா். தக்கலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com