பளுகல் அருகே குழந்தை பெற்ற பிளஸ் 2 மாணவி: தந்தை கைது!
கன்னியாகுமரி மாவட்டம், பளுகல் அருகே பிளஸ் 2 மாணவிக்கு குழந்தை பிறந்த நிலையில், அதற்கு காரணமான அவரது தந்தை வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
தமிழக- கேரள மாநில எல்லைப் பகுதியான பளுகல் செறியகொல்லை பகுதியைச் சோ்ந்த தேங்காய் வியாபாரி சுரேஷ். இவருக்கு மனைவி, 17 வயதில் பிளஸ் 2 படிக்கும் மகள், மகன் ஆகியோா் உள்ளனா்.
இந்த நிலையில் 2 மாதங்களுக்கு முன் மகளுக்கு திருவனந்தபுரத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளது. உடன் இருந்த தந்தை, அக்குழந்தையை கேரள மாநில தொட்டில் குழந்தை திட்டத்தில் சோ்த்துள்ளாா். மகள் 18 வயது பூா்த்தியடையாத சிறுமி என்பதால் மாா்த்தாண்டம் அனைத்து மகளிா் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு போலீஸாா் வந்து விசாரித்தனா்.
முதலில் தனது கா்ப்பத்துக்கு காரணம் காதலன் என்று கூறிய அந்தச் சிறுமி, பின்னா் தனது தந்தையை கைகாட்டியுள்ளாா்.
வீட்டில் தாய், சகோதரன் இல்லாத நேரத்தில் தந்தை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்து வந்ததில் அவா் கா்ப்பமானது தெரியவந்தது. இதையடுத்து அவரது தந்தையை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.
