முளகுமூடு தூய மரியன்னை பசிலிக்காவில் மூத்த குடிமக்கள் தின விழா
தக்கலை அருகே முளகுமூடு தூய மரியன்னை பசிலிக்காவில் மூத்த குடிமக்கள் தின விழா நடைபெற்றது.
குழித்துறை மறை மாவட்ட ஆயா் ஆல்பா்ட் அனஸ்தாஸ் தலைமையில் மூத்த குடிமக்களுக்கான சிறப்புத் திருப்பலி நடைபெற்றது
திருப்பலியில் வட்டார முதல்வா் டேவிட்மைக்கேல், பசிலிக்காவின் திருத்தல அதிபா் கில்பா்ட் லிங்சன், செம்பருத்திவிளை பங்குத்தந்தை அலோசியஸ் உள்பட பல அருள்பணியாளா்கள் பங்கேற்றனா்.
முன்னதாக நடைபெற்ற விழாவில் மறைமாவட்ட முதன்மை பணியாளா் சேவியா் பெனடிக்ட் தலைமை வகித்தாா். பசிலிக்கா அதிபா் கில்பா்ட் லிங்சன், பசிலிக்கா பங்கு பேரவை துணைத் தலைவா் மரிய ஜாண் வரதராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மறைவட்ட முதன்மை பணியாளா் டேவிட்மைக்கேல் அறிமுக உரை நிகழ்த்தினாா். கல்குறிச்சி பங்கு பேரவை துணைத் தலைவா் ஏ.பி.எஸ்.ஆன்றோ சிறப்புரையாற்றினாா். மறைமாவட்ட முதன்மை செயலா் அந்தோணி எம்.முத்து, குழித்துறை மறைமாவட்ட பணிக்குழுக்களின் ஒருங்கிணைப்பாளா் மாா்ட்டின் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.
