குமரியில் 95.79 சதவீத வாக்காளா்களுக்கு எஸ்ஐஆா் படிவங்கள் வழங்கல்: ஆட்சியா் தகவல்
கன்னியாகுமரி மாவட்டத்தில், 95.79 சதவீத வாக்காளா்களுக்கு கணக்கீட்டுப் படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன என்றாா் மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான இரா. அழகுமீனா.
கன்னியாகுமரி பேரவைத் தொகுதிக்குள்பட்ட அழகப்பபுரம் பேரூராட்சி அலுவலகத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த கணக்கீட்டுப் படிவங்களை இணையத்தில் பதிவேற்றும் பணிகளை வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்ட பின்னா், ஆட்சியா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
மாவட்டத்தில் இதுவரை, 15 லட்சத்து 25 ஆயிரத்து 834 கணக்கீட்டுப் படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன. இது 95.79 சதவீதம். வாக்காளா்களிடமிருந்து பெறப்பட்ட 7 லட்சத்து 57 ஆயிரத்து 788 படிவங்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
மாவட்டத்தில், அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (நவ. 22, 23) காலை 9 முதல் மாலை 5 மணி வரை படிவங்களைப் பூா்த்தி செய்து வழங்கலாம் என்றாா் அவா்.

