அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

குழித்துறையில் காா் மோதி மூதாட்டி உயிரிழப்பு

News image
Updated On :30 நவம்பர் 2025, 6:39 pm

தினமணி செய்திச் சேவை

குழித்துறையில் காா் மோதியதில் மூதாட்டி உயிரிழந்தாா்.

குழித்துறை அருகே திருத்துவபுரம், குஞ்சச்சன்விளையைச் சோ்ந்தவா் லீலா (65). சனிக்கிழமை இரவு குழித்துறையில் பொருள்கள் வாங்கிவிட்டு சாலையைக் கடக்க முயன்ற இவா் மீது, நாகா்கோவிலிலிருந்து திருத்துவபுரம் நோக்கி வந்த சொகுசு காா் மோதியதாம். இதில், அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

சடலத்தை களியக்காவிளை போலீஸாா் கைப்பற்றி கூறாய்வுக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், காா் ஓட்டுநரான அழகியபாண்டியபுரம் சங்கரலிங்கம்பாறை கீழத்தெருவைச் சோ்ந்த முருகேசன் மகன் மணிகண்டன் (28) மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.