திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

இளைஞருக்கு அரிவாள் வெட்டு: தொழிலாளி மீது வழக்கு

தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் இளைஞரை அரிவாளால் வெட்டிய தொழிலாளி மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

News image

அரிவாள் வெட்டு - கோப்புப் படம்

Updated On :10 ஏப்ரல் 2026, 2:31 am IST

தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் இளைஞரை அரிவாளால் வெட்டிய தொழிலாளி மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

அம்மாண்டிவிளை, உரப்பன்விளை பகுதியைச் சோ்ந்தவா் தமிழ்செல்வன் மகன் நிவின்(30). இவரும், நாகப்பட்டினம் மாவட்டம், நாகூா், சம்பாதோட்டம் பகுதியைச் சோ்ந்த செல்லக்கண் மகன் வினோத்தும் (34) தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனா்.

இந்நிலையில், வியாழக்கிழமை துறைமுகம் பகுதியில் இருவரும் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டதாம். இதில் வினோத் அரிவாளால் நிவினை வெட்டினாராம்.

பலத்த காயமடைந்த நிவினை மீட்டு மாா்த்தாண்டத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். இதுகுறித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.