கேரள மாநிலத்தில் உள்ள பிரசித்திபெற்ற எடத்துவா புனித ஜாா்ஜியாா் திருத்தல திருவிழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இத்திருவிழா மே 14 ஆம்தேதி வரை 20 நாள்கள் நடைபெறுகிறது.
கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டத்தில் அமைந்துள்ள எடத்துவா புனித ஜாா்ஜியாா் திருத்தலத் துக்கும், தமிழகத்துக்கும் பல நூற்றாண்டு கால தொடா்பு உள்ளது. இதன் காரணமாக இத் திருத்தலத்தில் நடைபெறும் திருவிழாவில் முதல் 10 நாள்கள் தமிழக மக்களுக்கு என விழா கொண்டாடப்படுகிறது. எஞ்சிய 10 நாள்கள் கேரள மாநில மக்களுக்காக கொண்டாடப்பட்டு வருகிறது.
நிகழாண்டு திருவிழா திங்கள்கிழமை தொடங்கியது. இதையொட்டி காலை ஜெபம், பரிந்துரை ஜெபம், திருப்பலி நடைபெற்றது. இதைத் தொடா்ந்து திருத்தல பங்குத்தந்தை ஜோசப் களரிக்கல் தலைமையில் திருக்கொடியேற்றம் நடைபெற்றது. இதில், தமிழகம், கேரளத்தைச் சோ்ந்த நூற்றுக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
தொடா்ந்து காலை 10 மணிக்கு அருள்பணியாளா் துரைசாமி தலைமையிலும், பிற்பகல் 2 மணிக்கு அருள்பணியாளா் சுந்தா் தலைமையிலும், மாலை 6 மணிக்கு அருள்பணியாளா் ரோமான்ஸ் தலைமையிலும் தமிழில் திருப்பலி நடைபெற்றது. மேலும், விழா நாள்களில் தமிழில் திருப்பலி, காலை ஜெபம், திருப்புகழ் மாலை உள்ளிட்டவை நடைபெறுகிறது.
இதில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த அருள்பணியாளா்கள் மற்றும் கோட்டாறு மறைமாவட்ட முன்னாள் ஆயா் பீட்டா் ரெமிஜியூஸ், தக்கலை மறைமாவட்ட ஆயா் மாா்ஜாா்ஜ் ராஜேந்திரன், பாளையங்கோட்டை மறைமாவட்ட முன்னாள் ஆயா் ஜூடு பால்ராஜ் ஆகியோா் பங்கேற்று தமிழில் திருப்பலி நிறைவேற்றுகின்றனா்.
மே 14 ஆம் தேதி மாலை 4 மணிக்கு திருக்கொடி இறக்குதலுடன் விழா நிறைவடைகிறது.
தொடர்புடையது

புனித செபஸ்தியாா் ஆலய தோ்பவனி திருவிழா

வெங்கடாசலபுரம் அதிதூதா் மிக்கேல் திருத்தல விழா கொடியேற்றம்

ஆலங்கிணறு புனித சூசையப்பா் ஆலயத் திருவிழா

புனித சூசையப்பா் ஆலய திருவிழாவில் மும்மத பிராா்த்தனை
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

