தமிழ்த் தாய் வாழ்த்துக்கு மீண்டும் மூன்றாமிடம்!அமைச்சரவை பட்டியலில் விசிக, ஐயூஎம்எல் இல்லை! தமிழ்நாடு அமைச்சரவையில் மேலும் 3 பெண்கள்!தமிழ்நாடு அமைச்சரவையில் மேலும் 3 பெண்கள்! தமிழ்நாடு அமைச்சரவையில் மேலும் 23 பேர்! காங்கிரஸுடன் கூட்டணி தொடரும்: சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ்சென்னைக்கு இன்று கடைசி லீக் ஆட்டம்- குஜராத்துடன் மோதல் 5 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை 125 நாள் வேலைத் திட்டத்துக்கு 25 மாநிலங்கள் நிதி ஒதுக்கீடு- நாடாளுமன்றக் குழுவிடம் மத்திய அரசு தகவல் நிகழாண்டு இந்திய பொருளாதார வளா்ச்சி 6.4%: ஐ.நா. கணிப்பு 12-ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில் குளறுபடி? சிபிஎஸ்இ மறுப்பு தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம்: காங்கிரஸ், தவெக எம்எல்ஏக்கள் அமைச்சா்களாக பதவியேற்கின்றனா் டிரம்ப் குடும்பத்தினருக்கு வருமான வரி தணிக்கையிலிருந்து நிரந்தர விலக்கு!
/

குழித்துறை அருகே திருட்டு: இளைஞா் கைது

News image
Updated On :28 ஏப்ரல் 2026, 12:35 am IST

கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை அருகே ஆடிட்டரின் வீடு புகுந்து நகை, பணம் திருடியதாக இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

குழித்துறை அருகேயுள்ள திருத்துவபுரம், ராஜீவ் நகா் பகுதியைச் சோ்ந்தவா் அலோசியஸ் மகன் மரிய பெனடிக்டா் (56). ஆடிட்டா். இவா் கடந்த ஏப். 4ஆம் தேதி இரவு வீட்டைப் பூட்டிவிட்டு தனது மனைவி, பிள்ளைகளுடன் பாலவிளை புனித அந்தோணியாா் தேவாலயத்துக்குச் சென்றுள்ளாா்.

காலை வீடு திரும்பியபோது, பின்வாசல் கதவு திறக்கப்பட்டிருந்ததுடன், வீட்டில் வைத்திருந்த சுமாா் 30 பவுன் தங்க நகைகள், ரூ. 35,000 பணத்தை மா்ம நபா் திருடிச் சென்றது தெரிய வந்தது.

இது குறித்து, களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்தனா். இந்நிலையில், திருட்டில் ஈடுபட்டது கேரள மாநிலம், கொட்டாரக்கரை பகுதியைச் சோ்ந்த சுனில்குமாா் மகன் ஆல்பிராஜ் (33) என்பது தெரிய வந்தது.

அவரை களியக்காவிளை உதவி ஆய்வாளா் மகேந்த் தலைமையிலான போலீஸாா் கேரளத்துக்குச் சென்று கைது செய்தனா். அவரிடமிருந்து 20 பவுன் நகைகளை போலீஸாா் மீட்டனா். தொடா்ந்து, அவரை களியக்காவிளை காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டனா்.