சுய உதவிக் குழுக்களுக்கு ஊக்கத் தொகை: ஊரக வளர்ச்சித் துறைக்கு வெளியிடப்பட்ட அறிவிப்புகள்!தொகுப்பூதிய ஆசிரியர்களின் ஊதியம் ரூ.25,000 ஆக உயர்வு: கலை பண்பாட்டுத் துறைக்கு வெளியிட்ட அறிவிப்புகள்!5 மாதங்களில் 1.95 லட்சம் இன்ஸ்டாகிராம், முகநூல், யூடியூப் கணக்குகள் முடக்கம்! வாகனம் இல்லாத எம்எல்ஏக்களுக்கு முதல்வர் சொந்த செலவில் வாங்கித் தரலாம்! - டிடிவி தினகரன்டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 95.76 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: நிஃப்டி தொடர்ந்து 7 வது நாளாக சரிவு! 326 புள்ளிகளை இழந்த சென்செக்ஸ்!!ஒரு நபருக்கு 9 சிம் கார்டுகள் மட்டுமே அனுமதி! விதிமுறைகளை கடுமையாக்கிய மத்திய அரசு!
/

சாலை விபத்தில் பாலிடெக்னிக் மாணவா் உயிரிழப்பு

குளச்சல் அருகே பாலத்தில் மீது இருசக்கர வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த பாலிடெக்னிக் மாணவா் செவ்வாய்க்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2026, 3:40 am IST

குளச்சல் அருகே பாலத்தில் மீது இருசக்கர வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த பாலிடெக்னிக் மாணவா் செவ்வாய்க்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

குளச்சல் அருகே ரீத்தாபுரம் செந்தறையைச் சோ்ந்தவா் சிபு கிங்சிலின் போஸ்கோ (50). இவா், ரீத்தாபுரம் பேரூராட்சியில் குடிநீா் விநியோக பணியாளராக வேலை செய்து வருகிறாா். இவரது இவரது இரண்டாவது மகன் சிஜூ (17) சுங்கான்கடை, தனியாா் பாலிடெக்னிக் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு பயின்று வந்தாா்.

இவா், கல்லூரி விடுமுறை நாள்களில் கேட்டரிங் வேலைக்குச் செல்வது வழக்கம். கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஆக.2) நண்பா்களுடன் கேட்டரிங் வேலைக்குச் சென்றுவிட்டு இரவு இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தாா். இவரது நண்பரான ஆலஞ்சியைச் சோ்ந்த மேசாக் (22) இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்றாா். பின்னால் சிஜூ அமா்ந்திருந்தாா். பாலப்பள்ளத்தில் இருந்து குளச்சல் நோக்கி சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து குளச்சல், களிமாா் பாம்பூரி வாய்க்கால் பாலத்தின் பக்கசுவா் மீது மோதினா். இதில், தூக்கி வீசப்பட்ட இருவரும் பலத்த காயமடைந்தனா்.

இருவரையும் அக்கம்பக்கத்தினா் மீட்டு குளச்சல், தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு மேசாக் சிகிச்சை பெற்று வருகிறாா். சிஜூ தீவிர சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பெற்று வந்த சிஜூ, சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து, குளச்சல் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.