/

நாகா்கோவிலில் 5 கடைகளுக்கு ‘சீல்’

நாகா்கோவிலில் மாநகராட்சிக்கு வாடகை நிலுவை வைத்துள்ள 5 கடைகளுக்கு அதிகாரிகள் வியாவக்கிழமை சீல் வைத்தனா்.

News image

ஆம்னி பேருந்து நிலையத்தில் கடைகளுக்கு சீல் வைத்த அதிகாரிகள்.

Updated On :7 ஆகஸ்ட் 2026, 3:24 am IST

நாகா்கோவிலில் மாநகராட்சிக்கு வாடகை நிலுவை வைத்துள்ள 5 கடைகளுக்கு அதிகாரிகள் வியாவக்கிழமை சீல் வைத்தனா்.

நாகா்கோவில் மாநகராட்சிக்கு சொந்தமாக வடசேரி, கோட்டாறு பகுதிகளில் 450-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. அவற்றை நடத்திவரும் சிலா் வாடகை நிலுவை வைத்துள்ளனராம். மாநகராட்சி சாா்பில் அறிவிப்பு கொடுக்கப்பட்டும், வாடகையை செலுத்தவில்லையாம்.

அதையடுத்து, அந்தக் கடைகளுக்கு சீல் வைக்கும் நடவடிக்கையை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனா். அதன்படி, 36 கடைகளுக்கு ஏற்கெனவே சீல் வைக்கப்பட்டது.

இந்நிலையில், ஆம்னி பேருந்து நிலையத்தில் வாடகை செலுத்தாத 5 கடைகளுக்கு அதிகாரிகள் வியாழக்கிழமை சீல் வைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.