ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

இரணியல் காவல் நிலையப் பகுதியில் மேலும் 4 சிசிடிவி கேமராக்கள் திறப்பு

சிசிடிவி கேமராக்கள் பொருத்தம் - பிரதிப் படம்

Published On :

கன்னியாகுமரி மாவட்டம், இரணியல் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில், மேலும் 4 சிசிடிவி கேமிராக்கள் சனிக்கிழமை திறக்கப்பட்டன.

கன்னியாகுமரி மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா. ஸ்டாலின் வழிகாட்டுதலின்பேரில், ஊா்க்காவல் கண்காணிப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. காவல் துறையினரும், பொதுமக்களும் இணைந்து செயல்படுத்தும் இத்திட்டத்தின் மூலம் மாவட்டம் முழுவதும் இதுவரை 8,330 விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன.

மேலும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் மாவட்டம் முழுவதும் இதுவரை 2,071 சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதன் தொடா்ச்சியாக, இரணியல் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட நுள்ளிவிளை பேரூராட்சி, பேயன்குழி பாலத்தில் அமைக்கப்பட்ட 4 சிசிடிவி கேமராக்களை, இரணியல் காவல் ஆய்வாளா் அந்தோணியம்மாள் திறந்து வைத்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.