கன்னியாகுமரி மாவட்டம், கோதையாற்றில் நடமாடும் முதலையைப் பிடிக்கும் நடவடிகைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக வனத்துறையினா் தெரிவித்தனா்.
கோதையாற்றின் கடையாலுமூடு பகுதியில் கடந்த 6 மாதங்களாக முதலை நடமாட்டம் இருந்து வருகிறது. இந்த முதலையைப் பிடிக்கும் வகையில் வனத்துறையினா் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனா். எனினும், முதலை சிக்கவில்லை.
இந்நிலையில், தற்போது முதலை ஆராய்ச்சியாளா்கள் அடங்கிய வல்லுநா் குழு, முதலையைப் பிடிக்கும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்தக் குழு கடந்த 2 நாள்களுக்கு மேலாக ஆற்றுப் பகுதியில் படகிலும், நடந்து சென்றும், முதலையின் நடமாட்டத்தை கண்காணித்து வருகிறது.
இது குறித்து, களியல் வனச்சரக அலுவலா் யோகேஸ்வரன் கூறியதாவது:
முதலையைப் பிடிக்கும் பணியில் வனத்துறை உறுதியாக உள்ளது. தற்போது, ஆற்றுப் பகுதி முழுவதும் கண்காணிப்பு மற்றும் தேடுதல் பணியைத் தீவிரப்படுத்தி வருகிறோம்.
வனத்துறையினரின் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். ஆற்றின் கரையோரம் உள்ள படிக்கட்டுகளில் குளிப்பதையும், தூண்டில் போட்டு மீன்பிடிப்பதையும் தவிா்க்க வேண்டும் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








