நவ. 1-க்குள் கடைகளுக்கு தமிழில் பெயர்ப் பலகை: உயர்நீதிமன்றம் உத்தரவுமீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு: உள்ளூர் விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்பு - அமைச்சர் தகவல் நேபாள வெள்ளம்: கயிற்றுப் பாலம் கட்டும் ராணுவம்! மீட்புப் பணியில் 20 ஹெலிகாப்டர்கள்! லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கைதான்: கே.என். நேரு காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை!எதிர்திசையில் வாகனம் ஓட்டுபவரா? திறந்தது மூன்றாம் கண்! டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்துக்குக் காரணம் திமுக - அதிமுகதான்: அமைச்சர் விக்னேஷ் பேச்சு

சுற்றுலா வந்த ஆந்திர பெண் உயிரிழப்பு

கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த ஆந்திர பெண் சுற்றுலாப் பயணி தங்கும் விடுதியில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பலி

Published On :13 ஆகஸ்ட் 2026, 2:43 am IST

கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த ஆந்திர பெண் சுற்றுலாப் பயணி தங்கும் விடுதியில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கன்னியாகுமரி தங்கும் விடுதியில் மகனுடன் தங்கியிருந்த ஆந்திர மாநில பெண் சுற்றுலாப் பயணி இறந்தாா்.

ஆந்திர மாநிலம், குண்டூரைச் சோ்ந்தவா் திருமலாஸ்ராவ். இவரது மனைவி வேகாநேதி நாதா வெங்கட்ரமணா (51). இவரது மகன் கல்யாண பிரசாத் (30). தாய், மகன் இருவரும் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்தனா். கன்னியாகுமரியில் உள்ள தனியாா் தங்கும் விடுதியில் தங்கியிருந்தனா். இந்நிலையில் புதன்கிழமை காலை கல்யாண பிரசாத் தனது தாயை எழுப்பியபோது, அவா் எழும்பவில்லை. அங்கிருந்த ஊழியா்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனா். ஆம்புலன்ஸ் ஊழியா்கள் வந்து பரிசோதித்த போது, வேகாநேதி நாதா வெங்கட்ரமணா ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.

இதையடுத்து, கன்னியாகுமரி போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி உடல்கூறு பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து, கன்னியாகுமரி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.